தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
Updated on
2 min read

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் 435-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 9மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.  இன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது.

5ம் நாள் திருவிழாவான ஜூலை 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.  காலை 11 மணிக்கு எர்னாகுளம் பிஷப் ஜோஸ் புதின்விட்டில் தலைமையில் மலையாளத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. அன்று இரவு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ திருப்பவனி நடக்கிறது.

திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பெருவிழாவான அன்று காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு அயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5.30மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

திருவிழாவில் நகரில் உள்ள அனைத்து மண்ணின் மைந்தர்கள், குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் உதவி பங்குதந்தை இன்பென்ட், மற்றும் பணிக்குழுவினர் செய்து வருகின்றன. ஆக.5ம் தேதி நடைபெறும் பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவில், கத்தோலிக்க பெருமக்கள் மட்டுமல்லாமல், இந்து, இஸ்லாமியர் உட்பட அனைவரும் சாதி, மத பேதமின்றி சமூக நல்லினக்கத்தோடு பங்குபெறுவது பனிமய மாதா ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

தூத்துக்குடி மாதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறது. உலகத்திலேயே தூத்துக்குடியில் மட்டும்தான் மறையுரை (திருப்பலி) மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்காகவும், ஒரே நாளில் 8 திருப்பலிகள் நடைபெறுவது இவ்வாலயத்தில் மட்டும்தான். இவ்விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம் என்று தெரிவித்தார். பேட்டியின் போது புரவலர் பெனோ வென்சர் ரோச், பனிக்குழு நிர்வாகிகள் லஷிங்டன், ஜானிபாய், அல்போன்ஸ் மோத்தா, உட்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com