

சென்னை: நாளை நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளதாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94 வது பிறந்த நாள் விழா நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மாலை 5 மணிக்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் விரிவான அளவில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலமுக்கிய தேசிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவினால் விழாவில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்ககத்தில் வெளியிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.