இனி மின்வெட்டு குறித்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வரும்: அப்டேட் ஆகும் மின் வாரியம்!

இனி உங்கள் பகுதியில் மின்வெட்டு எப்பொழுது என்பது குறித்த தகவல்களை முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் சேவையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.
இனி மின்வெட்டு குறித்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வரும்: அப்டேட் ஆகும் மின் வாரியம்!

சென்னை: இனி உங்கள் பகுதியில் மின்வெட்டு எப்பொழுது என்பது குறித்த தகவல்களை முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் சேவையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனி உங்கள் பகுதியை மின்வெட்டு குறித்த தகவல்கள் உங்களுக்கு முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இதற்காக, மின்சார நண்பன் என்ற சேவையை, மின் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் படி உங்கள் ஏரியாவில் மின்வெட்டு இருக்கும் என்றால் முன் கூட்டியே எஸ்எம்எஸ் அனுப்பப்படும். முதற்கட்டமாக எங்களிடம்  தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்துள்ள  வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

அத்துடன் விரைவில் வாடிக்கையாளர்கள் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக அலைபேசி செயலியும் அறிமுகபடுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com