

கைத்தறி நூற்பாலைகளுக்குத் தேவையான பருத்தியை விவசாயிகள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அ.மனோகரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மணியன் அளித்த பதில்:
இந்தியாவில் உற்பத்தியாகும் நூல்களில் 45.65 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. அதிக எண்ணிக்கையில் நூற்பாலைகள் இயங்கி வரும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. நமது மாநிலத்தில் 1,998 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.
பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் மகாராஷ்டிரத்தில் 224 நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. வெளிச்சந்தையில் பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
366 கிலோ கொண்ட ஒரு கண்டி பருத்தி நூல் ரூ.28 ஆயிரத்தில் இருந்து இப்போது ரூ.48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
எனவே, பருத்தி உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வரும் ஆண்டில் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானிய உதவிகளைக் கொடுத்து பருத்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அண்மையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.