
சென்னை இனி திருநங்கைகளுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இலவச கல்வி வழங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்பொழுது உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
தமிழகத்தில் இனி உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கு, அனைத்து துறைகளிலும் நெல்லையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும்.
அத்துடன் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.