நாங்கள்தான் உண்மையான அதிமுக: இரட்டை இலைச் சின்னத்துக்கான போட்டியில் குதித்தார் தீபா

இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி சசிகலா அணியும் பன்னீர்செல்வம் அணியும் போட்டி போட்டு வரும் நிலையில், தீபா தரப்பும் தற்போது களத்தில் குதித்துள்ளது.
நாங்கள்தான் உண்மையான அதிமுக: இரட்டை இலைச் சின்னத்துக்கான போட்டியில் குதித்தார் தீபா

சென்னை: இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி சசிகலா அணியும் பன்னீர்செல்வம் அணியும் போட்டி போட்டு வரும் நிலையில், தீபா தரப்பும் தற்போது களத்தில் குதித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி, தேர்தல் ஆணையத்திடம் தீபா சார்பில் 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் நிர்வாகிகள் கையெழுத்திட்ட இந்த பிரமாணப்பத்திரங்களில், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று ஜெ. தீபா பேரவை உரிமை கொண்டாடியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, இவ்விரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடியதால், இரட்டை இலைச் சின்னமே முடக்கப்பட்டது.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஆர்.கே. நகர் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒன்றிணைவது தொடர்பாக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஒரு பக்கம் பேசிக் கொண்டாலும், மறுபக்கம் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அவரவர் தரப்பில் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

சசிகலா அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் இதுவரை 3 லட்சம் பிரமாணப் பத்திரங்களும், பன்னீர்செல்வம் தரப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களும் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜெயலலிதா தீபா பேரவை தரப்பில் 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com