ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் சீரமைக்கப்படுமா?

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீபாலைவனநாதர் கோயிலில் உள்ள செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட நெற்களஞ்சியத்தில் சிதிலமடைந்த பகுதிகளை தொல்லியல் துறையினர்
ஸ்ரீபாலைவனநாதர் கோயிலில் உள்ள நெற்களஞ்சியம்.
ஸ்ரீபாலைவனநாதர் கோயிலில் உள்ள நெற்களஞ்சியம்.
Published on
Updated on
1 min read

பாபநாசம்: பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீபாலைவனநாதர் கோயிலில் உள்ள செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட நெற்களஞ்சியத்தில் சிதிலமடைந்த பகுதிகளை தொல்லியல் துறையினர் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஸ்ரீபாலைவனநாதர் கோயில் உள்புறம் ராஜகோபுரத்திற்கு வடபுறத்தில் செங்கல் நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இந்த நெற்களஞ்சியம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் அவரது அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் 1640 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முற்றிலும் செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் சுமார் 35 அடி உயரமும், 80 அடி சுற்றளவும் கொண்டது. சுமார் 3 ஆயிரம் களம் தானியத்தை சேமித்து வைக்கும் கொள்ளளவு உடையது. நெற்களஞ்சியத்தின் மேல்புரம் கூம்பு வடிவத்திலும், கீழே வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியத்தில் வைக்கப்படும் தானியங்கள் பல ஆண்டுகளுக்கு கெட்டு போகாமல் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தானியங்களை உள்ளே கொட்டவும், வெளியே எடுக்கவும் மேலிருந்து கீழாக மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெற்களஞ்சியம் ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் எனக் கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நெற்களஞ்சியம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் நெற்களஞ்சியத்தின் பல பகுதிகளில் கல் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீரால் இந்த நெற்களஞ்சியம் மேலும் பழுதடையும் முன் இதனை ரசாயனப் பூச்சு பூசி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நெற்களஞ்சியத்தை சம்பந்தப்பட்ட துறையினர் ஆண்டிற்கு ஒருமுறை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும்.


-கே.வீரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com