கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது தான் யோகா: ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது தான் யோகா என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

கோவை: ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது தான் யோகா என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

3வது சர்வதேச யோகா தினம் இன்று புதன்கிழமை (ஜூன் 21) யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்று பேசினார்.

அப்போது, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் யோகாவின் முக்கிய நோக்கமாகும். உலக மக்களுக்கு யோகாவை பரிசாக அளித்துள்ளது இந்தியா.

மேலும், இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது. தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் யோகா கற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.