கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இலங்கை சிறைகளில் இருந்த 85 தமிழக மீனவர்கள் விடுதலை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:11 am

DIN

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரித்தோ நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய  பதற்றமான சூழலைத் தவிர்க்க, இந்திய மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திரிகோணமலை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் உத்தரவை மன்னார் நீதிமன்றம் பிறப்பித்தது.

முதலில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 53 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் வவுனியா சிறையில் இருந்து  24 பேரும் , இறுதியாக திரிகோணமலை சிறையிலிருந்து 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள்  அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.