திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பணம், பரிசுப்பொருட்களை வாக்காளர்கள் வாங்கக் கூடாது: உமேஷ் சின்ஹா பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை

News image
Updated On :31 மார்ச் 2017, 6:22 am

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆர்.கே. நகர் பகுதிகளை ஆய்வு செய்த சின்ஹா, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  
ஊடகங்களின் பணியை தேர்தல் ஆணையம் பாராட்டுகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக புகார் வந்துள்ளன. அதுகுறித்து விசாரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், பணம், பரிசுப்பொருட்களை வாக்காளர்கள் வாங்கக் கூடாது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமூக விரோதச் செயல்களை தடுக்க மத்தியப்படை பாதுகாப்பு போடப்படும். வாக்குச் சாவடிகளுக்கு வெளியேயும் கண்காணிப்பு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
முக்கியமான பகுதிகள் தனி கவனம் செலுத்தப்படும். அப்பகுதிகளிலும் கண்காணிப்பு கேமார பொருத்தப்படும்.
வாக்காளர்கள் வாக்குகளை விற்கக்கூடாது என விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் புகார்களை பொதுமக்கள் எந்த நேரமும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம். வாக்காளர்களை மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பணப்பட்டுவாடா முயற்சிகளைத் தடுப்பது, வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை பற்றி காவல்துறை அதிகாரிக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.