பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ப.சிதம்பரம் விரைவில் ஓடி ஒளிவார்: எச். ராஜா அதிரடி தாக்கு

கார்த்தி சிதம்பரம் லண்டனில் ஒளிந்துகொண்டதுபோல், இன்னும் சில நாட்களில் அவரது தந்தை ப. சிதம்பரமும் ஓடி ஒளிந்து கொள்வார் என்று பாஜக

News image
Updated On :21 மே 2017, 1:05 pm

DIN

மதுரை: கார்த்தி சிதம்பரம் லண்டனில் ஒளிந்துகொண்டதுபோல், இன்னும் சில நாட்களில் அவரது தந்தை ப. சிதம்பரமும் ஓடி ஒளிந்து கொள்வார் என்று பாஜக தேசிய செயல்ர எச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் எச். ராஜா மதுரையில் கூறியதாவது:

சுதந்திர போராட்ட காலத்தில் லண்டனில் “இந்தியா ஹவுஸ்” என்ற கட்டிடம் இருந்தது. அதில், சுதந்திர போராட்ட வீரர்கள் சென்று தங்கி வந்தனர்.

ஆனால், இன்று அந்த புனிதமான கட்டிடத்தில் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள லலித் மோடி, பின்னர், விஜய் மல்லையா தங்கினார். தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ப. சிதம்பமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களில் கார்த்தி சிதம்பரம் இப்போதே லண்டனில் ஓடி ஒளிந்து கொண்டார். அடுத்து இன்னும் சில நாட்களில் ப. சிதம்பரமும் ஓடி ஒளிந்து கொள்வார் என்றார்.

மேலும், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். நாமும் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று எச். ராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.