அமைச்சர் ஜெயக்குமாரிடம் பொது மக்கள் புகார்

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
Updated on
1 min read

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பாவனா (7), யுவஸ்ரீ (8) ஆகிய இருவரும் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் புதன்கிழமை உயிரிழந்தனர். 
இந்த நிலையில், சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகருக்கு வியாழக்கிழமை (நவ.3) வந்தார். 
அப்போது அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்
சிறுமிகள் உயிரிழப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அந்தப் பகுதியில் இதுபோன்று பாதுகாப்பின்றி இருக்கும் மின் கேபிள்கள், மின்சாரப் பெட்டிகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com