புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து புதன்கிழமை இரவு 150 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 30 கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே 2 விசைப்படகுகளில் என். சந்திரபோஸ் (28), என். தெய்வக்குமார்(20), கே. குகன்(20), ஆர். வினோத் (21), வி. பிரவீன்(21), ஆர். விஜயேந்திரன் (38), என். செல்வநாதன் (60), எஸ். முருகன்(35), ஆர். பாண்டி (40) ஆகிய 9 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி 9 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். தொடரும் இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.