

வருமானவரித் துறை சோதனை நடைபெறும் அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரன் கோ பூஜை நடத்தினார்.
சென்னை, மன்னார்குடியில் உள்ள டிடிவி தினகரன் வீடுகளில் இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவர் எவ்வித பரபரப்பும் இன்றி இயல்பாக மனைவி, மகளுடன் இணைந்து கோ பூஜை நடத்தினார். அப்போது தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா பசு, கன்றுக்கு வாழைப்பழங்களை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.