

சென்னை: நடிகர் கமலஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.
டிவிட்டரில் அரசியல் செய்கிறார், களத்தில் இறங்குவது கஷ்டம் என்று பாஜக தலைவர்கள் பலரும், நடிகர் கமலஹாசன் குறித்துக் கருத்துக் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமலஹாசன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே, அந்தப் பகுதியை இன்று காலை கமலஹாசன் நேரில் பார்வையிட்டு, அங்கிருந்த மக்களிடமும் நிலைமையை கேட்டறிந்தார்.
இது குறித்துக் கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஆய்வு செய்த நடிகர் கமலஹாசனை வரவேற்கிறேன். அதே போல, டெங்குவை ஒழிக்க அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.
பொன். ராதாகிருஷ்ணன் கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியை பதிவிட்டுள்ளார். அதாவது, உங்கள் பினாமி தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்யாமல் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்று கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.