மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடம்பெயரும் வண்ணத்துப் பூச்சிகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி 

பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்ந்து (வலசை) வந்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடம்பெயரும் வண்ணத்துப் பூச்சிகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி 

பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்ந்து (வலசை) வந்துள்ளன.
தமிழகத்தில் 323 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இந்த வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வு காலம் என்பது மிகவும் குறுகியது. அதாவது, முட்டையிடுவது, முட்டைப் புழு, கூட்டுப்புழு மற்றும் முழு வளர்ச்சியடைந்த வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இவற்றின் வாழ்க்கை 30 நாள்கள் முதல் 40 நாள்களில் முடிவடைந்து விடுகிறது.
வண்ணத்துப் பூச்சிகள் உணவு, இனப்பெருக்கம் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இடம்பெயர்கிறது. இடப்பெயர்ச்சியின் போது மலைப் பிரதேசத்தில் இருந்து சமவெளிப் பகுதிக்கும், அதேபோல் சமவெளிப் பகுதியில் இருந்து மலைப் பகுதிக்கும் செல்கிறது. இவற்றின் நிறம், உடல் அமைப்பு, வால், வண்ணம் அடிப்படையில் வகை பிரிக்கப்படுகின்றன. 
தற்போது, தேனி மாவட்டத்தில் உள்ள சமவெளிப் பகுதியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு தினமும் லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் வலசை செல்கின்றன. இந்த நிகழ்வு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பின்னர், மூன்றாம் தலைமுறை வண்ணத்துப் பூச்சிகள் ஏப்ரல் மாதத்தில் சமவெளிப் பகுதிக்கு இடம்பெயர தயாராகும்.
இது குறித்து வண்ணத்துப் பூச்சிகள் ஆர்வலரும், தமிழ்நாடு பட்டர்பிளை அசோசியேஷன் நிறுவனர்களில் ஒருவரான அப்பாவு பாவேந்தன் கூறியது:
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து மே மாதங்களில் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு பட்டாம் பூச்சிகள் வலசை செல்லும். உணவு, இனப்பெருக்கம் மற்றும் சீதோஷ்ண நிலைக்காக இந்த இடம்பெயர்தல் நடைபெறுகின்றன. 
அதன்பின்னர், அவைகளின் மூதாதையர் வாழ்ந்த பூமியான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அக்டோபர் மாதத்தில் வந்துவிடும். தற்போது, செப்டம்பர் மாதத்தில் ஓரளவு மழை பெய்து, நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் வலசை வரத் துவங்கியுள்ளன. 
இதேபோல், தமிழகத்தில் உள்ள சமவெளிப் பகுதிகளில் இருந்து கோவை, தேனி, ராஜபாளையம், நாகர்கோவில் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளுக்குச் செல்கின்றன. 
கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சில வகையானபட்டாம் பூச்சிகள் வலசை செல்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், பட்டாம் பூச்சி வலசை போவது குறைந்தது. இந்தாண்டு முன்னதாகவே மழை பெய்துள்ளதால், முன்னதாகவே வலசை போகத் துவங்கியுள்ளன. 
இந்த பட்டாம் பூச்சிகளின் வருகையினால் வனத்தின் வளத்தை அறிந்து கொள்ளலாம். காமன் மைக்ரேட், காமன் குரோ, புளூ டைகர், டார்க் புளூ டைகர் ஆகியன தற்போது வலசை வரத் துவங்கியுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com