பொய்யான ஆவணங்களை வெளியிட்டு தவறான செய்தியைப் பரப்புகின்றனர்: கே.ஏ. செங்கோட்டையன்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக (அம்மா) மாபெரும் வெற்றி பெறும் என்ற பீதியின் காரணமாக, எங்கள் மீது பொய்யான ஆவணங்களை வெளியிட்டு தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர் என அக்கட்சியின் அவைத் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பொய்யான ஆவணங்களை வெளியிட்டு தவறான செய்தியைப் பரப்புகின்றனர்: கே.ஏ. செங்கோட்டையன்
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக (அம்மா) மாபெரும் வெற்றி பெறும் என்ற பீதியின் காரணமாக, எங்கள் மீது பொய்யான ஆவணங்களை வெளியிட்டு தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர் என அக்கட்சியின் அவைத் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக (அம்மா) வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் எங்கள் மீதான பீதியின் காரணமாக வேண்டுமென்றே உண்மைக்கு மாறான செய்திகளை ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்று அதன் மூலம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில், எங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி ஆவணங்களை வெளியிட்டு தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இது உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் நம்ப வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com