பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வருமான வரித் துறை சம்மனை எதிர்த்து துணை வேந்தர் கீதாலட்சுமி மனு

வருமான வரித் துறை அனுப்பியுள்ள சம்மனை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2017, 8:13 pm

DIN

வருமான வரித் துறை அனுப்பியுள்ள சம்மனை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில், ஏப்ரல் 7, 8-ஆம் தேதிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது வீட்டில் நடைபெற்ற சோதனையில், வெள்ளி பொருள்களுடன் நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அன்றைய தினம், ஏப்ரல் 10-இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, அழைப்பாணை (சம்மன்) வழங்கப்பட்டது. எனது கோரிக்கையின் பேரில், நேரில் ஆஜராகும் தேதியை வருமான வரித் துறை புதன்கிழமைக்கு (ஏப்.12) மாற்றியது.
எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பானையில், தேவையான எந்தத் தகவல்களையும், வழக்கு குறித்த விவரங்களையும் வருமான வரித் துறையினர் தெரிவிக்கவில்லை. இது வருமான வரித் துறைச் சட்டம்-1961, பிரிவு 131-க்கு எதிரானது. எனவே, இந்த சம்மனை ரத்து செய்வதோடு, வருமான வரித் துறை நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.