பட்டாம்பூச்சி: ஹென்றி ஷாரியர்

பிரெஞ்சு சிறைக் கைதி ஹென்றி ஷாரியர் எழுதிய சுய வரலாற்று நாவல் பாப்பிலன். இந்த நாவலை "பட்டாம்பூச்சி' என்ற பெயரில் தமிழில் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ந்தார்.
பட்டாம்பூச்சி: ஹென்றி ஷாரியர்
Updated on
1 min read

பிரெஞ்சு சிறைக் கைதி ஹென்றி ஷாரியர் எழுதிய சுய வரலாற்று நாவல் பாப்பிலன். இந்த நாவலை "பட்டாம்பூச்சி' என்ற பெயரில் தமிழில் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ந்தார். தொடக்கத்தில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக வெளியானது இந்த "பட்டாம்பூச்சி'.
செய்யாத குற்றத்துக்காக அடைபடும் ஹென்றி ஷாரியர், சிறையில் இருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளே நாவலின் கதை. ஒவ்வொரு முறை தப்பிக்கும்போதும் மாட்டிக் கொள்வது, பின்னர் பல்வேறு சிறைகளில் அடைப்பட்டு கிடந்தாலும் மீண்டும் தப்பிக்க முயல்வது என நாவல் முழுவதும் மனித மனதின் போராட்டம்தான்.
அதன் ஊடாக காதல், நட்பு, மனிதநேயம், பயணம், சாகசம் என படிப்போருக்கு சலிப்பூட்டாத நாவல் இது. பிரெஞ்சு மொழியில் முதன்முதலில் 1969-இல் வெளியான இந்த நாவல், உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல லட்சம் பிரதிகளை விற்றுள்ளது. மனித மனம் எதிலும் அடைபட்டுக் கிடப்பது இல்லை, அது ஒவ்வொரு முறை அடைபட்டாலும் மீண்டு வரவே முயற்சி செய்யும் என்பதே பிரதான கரு. பட்டாம்பூச்சியின் விறுவிறுப்பு கருதி ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டார்கள். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரஷிய மற்றும் ஆங்கில நாவல்கள் அளவுக்கு இந்த பட்டாம்பூச்சி தமிழகத்தில் புகழ் பெறாமல் இருந்தாலும், பட்டாம்பூச்சியை படித்தவர்கள் பிற நாவல்களை விட இந்த நாவலை உயர்வாகக் கருதுகின்றனர். அதற்கு உதாரணமாக, தற்போது நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புதிதாக அச்சடிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த பட்டாம்பூச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com