தமிழறிஞர் சோமசுந்தர பாரதி நூல்கள் நாட்டுடைமை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
தமிழறிஞர் சோமசுந்தர பாரதி நூல்கள் நாட்டுடைமை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்தப் பிரச்னையை அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
ராஜன் செல்லப்பா: பசுமலை பாரதி என்ற சோமசுந்தர பாரதியின் வாழ்க்கை வரலாறு மறைக்கப்பட்டதாக கருத்துகள் கூறப்படுகின்றன. அவரது வாரிசுகள் இப்போதும் உள்ளனர். எனவே, அவருக்கு அரசு விழா எடுக்க முன்வர வேண்டும்.
செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ: சோமசுந்தர பாரதிக்கு நினைவுச் சின்னமும், அரசு விழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் குறித்து துறையின் மூலமாக ஆய்வு செய்யப்படும். அவருடைய வரலாற்றை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: மறைக்கப்பட்ட தன்மானத் தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் 1938 முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது அவர்தான் முதல் தள நாயகராக விளங்கினார். தொல்காப்பியம் குறித்தும் சங்க இலக்கியங்கள் பற்றியும் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரிய ஆராய்ச்சி அறிஞர். நாவலர் என்ற பட்டம் பெற்றவர். அவருக்கு சம்ஸ்கிருதம், தமிழ் என அனைத்து மொழிகளும் தெரியும். ஆனால், தமிழில் அதிகமான ஆர்வம் கொண்டவர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்தவருக்கு சிலை அமைப்பதும், விழா கொண்டாடுவது மட்டுமல்ல, அவர் எழுதிய நூல்கள் இன்றைக்கு மறைக்கப்பட்டு விட்டது. அந்த நூல்கள் அனைத்தும் ஆராய்ச்சியில் இருக்க வேண்டியவை. எனவே, அவற்றை அரசு அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் கோரிக்கையை ஏற்று இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com