கொடை ரோடு பகுதியில் திராட்சை விளைச்சல் அமோகம்

கொடை ரோடு சுற்று வட்டாரப் பகுதியில் திராட்சை விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜாதிக்கவுண்டன்பட்டியிலுள்ள தோட்டத்தில் காய்த்து தொங்கும் திராட்சை.
ஜாதிக்கவுண்டன்பட்டியிலுள்ள தோட்டத்தில் காய்த்து தொங்கும் திராட்சை.

கொடை ரோடு சுற்று வட்டாரப் பகுதியில் திராட்சை விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், சிறுலை அடிவாரப் பகுதியில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு திராட்சை சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கொடை ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் கொடித் திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை என 3 வகையான திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் சிறுமலை அடிவாரத்தில் திராட்சை சாகுபடி செய்துள்ள தோட்டங்கள், அறுவடைக்கு தயாராகி வருகின்றன. தரமான பழங்களோடு, உற்பத்தியும் விலையும் அதிகரித்துள்ளதால் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், திண்டுக்கல் பகுதி திராட்சையை வாங்க வரத் தொடங்கியுள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய நிலையில், கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com