ஆழியாறில் யானை சவாரி துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை யானை சவாரி தொடங்கப்பட்டது.
ஆழியாறு குரங்கு அருவி அருகே யானை சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.
ஆழியாறு குரங்கு அருவி அருகே யானை சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை யானை சவாரி தொடங்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தின் ஆழியாறு பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக யானை சவாரி தொடங்க வனத் துறை திட்டமிட்டது. இதையடுத்து, டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கல்பனா என்ற யானை கொண்டு வரப்பட்டு, வெள்ளிக்கிழமை சவாரி தொடங்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் யானை சவாரியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர்கள் சுப்பையா, முகமது சபாப், ஓய்வுபெற்ற வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலா ரூ. 200 கட்டணம்: குரங்கு அருவியில் தொடங்கி நவமலை சாலை வழியாக 30 நிமிடங்கள் நடைபெறும் யானை சவாரிக்கு ஒருவருக்கு ரூ. 200 வசூலிக்கப்படும். வாரத்தின் அனைத்து நாள்களும் யானை சவாரி நடைபெறும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
வனக் கால்நடை மருத்துவர் தேவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமுக்கும், ஆழியாறு பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள யானைகள் முகாமுக்கும் வனக் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com