எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவிரி: மின்சார ரயில்களை நிறுத்திப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை பூங்கா நகர், எழும்பூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகத்தினர்

News image

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:32 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை பூங்கா நகர், எழும்பூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்டனர். அவர்கள் சென்னை கடற்கரை -தாம்பரம், தாம்பரம் -கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களின் போராட்டம் காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை சுமார் 40 நிமிடம் வரை பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
திராவிடர் கழகத்தினர்: திராவிடர் கழகம் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் -சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 80 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.