உச்ச நீதிமன்றத்திடம் இருந்து தமிழக மக்கள் நீதியை தான் எதிர்பார்க்கின்றனர்; ஆறுதலை அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
'காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் நலன்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
இந்த அக்கறை உண்மை என்றால் அது வரவேற்கத்தக்கதுதான். அதிலும் தலைமை நீதிபதி அமர்வில் வேறு வழக்குக்காக ஆஜராகச் சென்ற தமிழக அரசின் வழக்குரைஞரை அழைத்து இவ்வாறு கூறியிருப்பது, காவிரிப் பிரச்னையில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உச்ச நீதிமன்றம் கவனித்து வருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் மத்திய அரசே மதிக்கவில்லை என்பதுதான் தமிழகத்தில் போராட்டம் வெடிப்பதற்கான முக்கிய காரணம்.
வரும் 9-ஆம் தேதி, காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாள்களில் அமைக்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும். அதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல, நீதியைதான் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!

மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



