கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

போராட்டக்காரர்கள் மீது போலீஸார் அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு இடங்களில் போலீஸார் அத்துமீறலில் ஈடுபட்டதாக

Updated On :6 ஏப்ரல் 2018, 1:17 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு இடங்களில் போலீஸார் அத்துமீறலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களைக் கீழே தள்ளி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாசர் அராபத் என்ற ஊழியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.