ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்!

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்!

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்று சூழலுக்கும் தங்கள் பகுதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடியில் உள்ள ஸடெர்லைட் ஆலையினை நிரந்தராமாக மூட கோரி ஆலையின் அருகே உள்ள குமரரெட்டியார்புரம் கிராம மக்கள் கடந்த 60 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களின் போராட்டத்துக்கு பண்டாரம்பட்டி மடத்தூர் முருகேசநகர் முருகேசபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆலையினை தடை செய்யகூடாது என கோரிக்கையினை முன் வைத்து ஸடெர்லைட் ஆலை ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் ஆலை வளாகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்தனர். 

பின்னர் தூத்துக்குடி  மாவட்ட  ஆட்சியர்  அலுவலகத்தில்  மனு  கொடுக்க  பேருந்தில்  சென்ற போது  மடத்தூர்  விளக்கு  அருகே  ஸ்டெர்லைட்  ஆலையை எதிர்ப்பு  குழுவினர்   பேருந்தை  மறைத்து  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  

அப்போது  சிலர்  ஸ்டெர்லைட்  பேருந்து  மீது  கல்வீசிய  தாக்கினர். இதில்  ஒரு பேருந்து  கண்ணாடி  உடைந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டகாரர்களிடம்  பேச்சுவார்த்தை செய்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். இந்த  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com