சிறப்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Updated on
1 min read

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல், உரிமையியல் வழக்குரைஞர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு தகுதிவாய்ந்த
வழக்குரைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் www.chennai.nic.in  என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
முகவரி: மாவட்ட நடுவர், சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண் 62, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு மே 15 -ஆம் தேதி மாலை 5.45-க்குள் வரும் விண்ணப்பங்கள்
மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com