அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சியின் சட்ட விதிப்படி, ஆண்டுதோறும் இரண்டு செயற்குழுக் கூட்டங்கள், ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். 

அந்த அடிப்படையில், அதிமுகவின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கடந்த 13-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். 

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் தேர்தல் களப் பணிகள் குறித்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் 23-ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com