சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் உடல்நாத் குறைபாடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலானது 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாஜ்பாயின் அஸ்தியை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் விரைவில் கரைக்க உள்ளனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடையாறு, ஸ்ரீரங்கம், வைகை, பவானி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

செங்கல்பட்டில் ஆக. 14ல் உள்ளூர் விடுமுறை!

தடை தாண்டுதல்: இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



