சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கருணாநிதி: தலைவர்கள் புகழாரம்

மறைந்த  திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த  சமூக சீர்திருத்தவாதி  என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
Published on


சென்னை: மறைந்த  திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த  சமூக சீர்திருத்தவாதி  என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

"தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் தேசியத் தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி நினைவஞ்சலி  கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.   கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியது:  1980}இல் திமுக} காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. அன்றிலிருந்து கருணாநிதி மறையும் வரை அவருடன் அதே உறவு நிலைத்தது. திமுக}காங்கிரஸ் இடையே பிரச்னை என்றாலும், தேர்தலில் தொகுதி உடன்பாடு என்றாலும் நான் தமிழக காங்கிரஸ் தலைவரிடம் போகாமல் கருணாநிதியிடம்தான் பிரச்னைக்குத் தீர்வுகேட்டுச் செல்வேன்.  

அவரே எனக்கு நீதிபதியாக இருந்தார். பெரியாரையும் அண்ணாவையும் பின்பற்றி 21}ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். 

காங்கிரஸýடன் கூட்டணி வைத்தபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோதும் தனது கொள்கைகளை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை.
முன்னாள் பிரதமர் தேவெ கெüட:  சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. மத்தியில் நிலையான ஆட்சியைக் கொடுக்க சுமார் 20 ஆண்டுகள்  தேசிய தலைவர்களுக்கு ஆதரவளித்தவர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா:  தேவெ கெüட பிரதமராக இருந்தபோது,  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்ற வேண்டும் என்று கருணாநிதியிடம் இருந்து உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வந்தது.  "கருணாநிதி' என்று தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் ஒரே மாதிரி தானே இருக்கிறது. ஆனால், சென்னை மட்டும் தமிழில் "சென்னை' என்றும் ஆங்கிலத்தில் "மெட்ராஸ்' என்றும் மாறுகிறது. அதையும் சென்னை என்று மாற்ற வேண்டும் என்றார்.  அவரின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை நகரம் இருக்கும் வரை  கருணாநிதியின் பெயரைச்  சொல்லிக் கொண்டிருக்கும். 

பிகார் முதல்வர் நிதீஷ் குமார்: 

சமூகநீதி மற்றும் சமத்துவத்துக்காகவும் பிற்படுத்தப்பட்ட நலனுக்காகவும் போராடியவர் கருணாநிதி.   

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி:

திமுக}பாஜக உறவு நீண்ட காலமுடையது.  நாட்டிலேயே அவசர நிலை காலத்தையும் காங்கிரஸ் கட்சியையும் முதலில் எதிர்த்த இரண்டு கட்சிகள் பாஜகவும் திமுகவும் தான்.  கருணாநிதி  ஒரு தேசியத் தலைவர். கூட்டாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி: கருணாநிதி சிறந்த பகுத்தறிவுவாதி; ஆனால் கடவுளை நம்புபவர்களை மதித்தவர்.  மதச்சார்பின்மையும் கூட்டாட்சி தத்துவமும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி : பெரியார், அண்ணாவின்கொள்கைகளை பின்பற்றியவர் கருணாநிதி. சுயமரியாதை. சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சிதான் அந்தக் கொள்கைகள்.  மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் .
ஃபரூக் அப்துல்லா:   கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் 2019}ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றார். 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்களவை தெலுங்கு தேசத் தலைவர் ஒய்.எஸ்.செüத்ரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தேசியவாத காங்கிரஸின் தேசிய  பொதுச்செயலாளர் பிரஃபுல் படேல்,   தில்லி மாநில முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
 மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, பாஜக தமிழக மேலிடப் பிரதிநிதி முரளிதரராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com