மெரீனா கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலி 

மெரீனா கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலி 

மெரீனா கடலில் தடையை மீறி குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. 
Published on

சென்னை: மெரீனா கடலில் தடையை மீறி குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை மெரீனா கடலில் குளிப்பது தடை செய்யப்பட்டு, மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அதனை மீறும் விதமான சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது  

அந்தவரிசையில் விடுமுறை நாளான ஞாயிறன்று மெரீனா கடற்கரையில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பரத், ஜெய்கீர்த்தி, தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். 

மூழ்கிய மூன்று பேரில்  தினேஷ் என்ற மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். மீதமுள்ள பரத், ஜெய்கீர்த்தி என்ற இரண்டு மாணவர்களை கடலில் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com