
சென்னை: வரும் ஞாயிறு அன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நண்பகல் 12 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெள்ளி மாலை வெளியாகியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா கட்டத் திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி அன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.