
சென்னை: பதினாறு நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.12000 கோடி முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
திங்களன்று தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேகேதாட்டு, ஸ்டெர்லைட் விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு அனுமதி ஆகிய விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளபட்டது.
இறுதியில் 16 தொழில்நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவலால் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.