சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.40 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு மதுரைக் கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு அதில் முறைகேடுகள் நிகழாமல் தடுக்க புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் புலனாய்வுக் குழுவினர் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் டிசம்பர் 20 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சரக்குகள் அனுப்பாமலேயே ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
கழிவு இரும்புகள் வாங்கி விற்பது தொடர்பான வணிகத்தில், எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்காமலேயே போலி ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் மூலமாக ரூ.220 கோடி வரை வர்த்தகம் செய்ததாக கணக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.40 கோடி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ளீட்டு வரி செலுத்தியாகக் கூறி, போலி வணிகத்திற்கு செலுத்திய ஜிஎஸ்டி தொகையையும் திரும்பப் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த நீரஜ்குமார் ஓஷா மற்றும் கோயங்கா ஆகியோரை ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு

காத்திருக்கும் வாய்ப்பு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


