திருப்பதி அருகே செம்மரக் கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதியை அடுத்த மங்களம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வாளர் விஜய நரசிம்மலு தலைமையிலான அதிரடிப் படை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 வாகனங்களில் சிலர் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீஸாரைக் கண்டவுடன் அவர்கள் தப்பியோடினர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கார், ரூ. 5 லட்சம் மதிப்பிலான 9 செம்மரக் கட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித்குமார் (21) மற்றும் ஏசு (31) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.