விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தூர் சார்-பதிவாளர்அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை: ரூ. 65 ஆயிரம் பறிமுதல்

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

News image
சாத்தூர் சார்-பதிவாளர்அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
Updated On :5 பிப்ரவரி 2018, 8:00 pm

DIN

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திங்கள்கிழமை மாலை விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தலைமையில் ஆய்வாளர் பூமிநாதன், காந்தியவன் உள்ளிட்ட அதிகாரிகள் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சார்-பதிவாளர் பானுமதி, அலுவலக காவலர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.