

தமிழகத்தை ஜெயலலிதா என்கிற தெய்வம் ஆட்சி செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழினிசாமி,
தமிழ்நாட்டை ஜெயலிதா என்கிற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது. உலகத்தையே உற்று கவனிக்க வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்தான் தமிழக மக்கள் வளர்ந்தார்கள். வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்களை தந்துவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலதாவின் அரசியல் வளர்ச்சி என்பது அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை போன்றது.
பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து 6 முறை முதல்வராக இருந்துள்ளார். பூமி உள்ளவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.