திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் புறப்படும் நேரம் மாற்றம்

திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக 40 நிமிடங்களுக்கு முன்பாக
திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் புறப்படும் நேரம் மாற்றம்
Updated on
1 min read

திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக 40 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி முதல் திண்டுக்கல் வரை 20 பெட்டிகளுடன் (கோச்) ஒரே வண்டியாக வரும் இந்த ரயில், அதன்பின்னர், 2 ரயில்களாக ஈரோடு மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக பிரித்து இயக்கப்படுகிறது.     காலை 5.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், காலை 10.50 முதல் 11 மணிக்குள்ளாக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்கிறது.

பின்னர், முதல் பாதி பெட்டிகளுடன் ஈரோடு மார்க்கமாகச் செல்லும் ரயில், சுமார் 10 நிமிடங்களில் புறப்படுகிறது. ஆனால், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை வரை செல்ல வேண்டிய மீதி பெட்டிகள் கொண்ட ரயில், சுமார் 1 மணி நேரம் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.  மயிலாடுதுறை ரயிலுக்கான என்ஜின் இணைப்பதற்கு 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 1 மணி நேரம் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்படுவதால், தென் மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, தினமணியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, திண்டுக்கல்  ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வந்த மயிலாடுதுறை ரயில் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் காலை 11.25 மணிக்கு  புறப்பட்டுச் செல்லும் என, மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுமார் 40 நிமிடங்கள் பயண நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com