
விருதுநகர்: கமலுக்கு கட்டம் சரியில்லை என்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பர் ராஜேந்திர பாலாஜி. இவர் செவ்வாயன்று விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேவிகளை எழுப்பினர். அதில் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கமலுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. எல்லா தலைவர்களையும் சென்று சந்திக்கிறார். இதற்கு முன்பு கட்சி துவங்கிய யாரும் இது போல செய்ததாக நான் கேள்விப் பட்டதே இல்லை. எம்.ஜி.ஆர் துவங்கி யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தொண்டர்களையே சென்று சந்தித்துள்ளனர்.
கமல் செய்வது சமுகத்தில் இல்லாத ஒரு நடைமுறையாக இருக்கிறது. அவரது ஆரம்பமே சரியில்லை. கட்டம் சரியில்லை. இது கண்டிப்பாக ஒரு கேலிக்கூத்தாகத்தான் முடியும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.