செங்கல்பட்டு அருகே நில அதிர்வு?: தனியார் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம் 

செங்கல்பட்டு அருகே மஹிந்தரா சிட்டி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு?: தனியார் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம் 
Updated on
1 min read

சென்னை: செங்கல்பட்டு அருகே மஹிந்தரா சிட்டி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது மஹிந்தரா சிட்டி. இந்தப் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே மஹிந்தரா சிட்டி பகுதியில் வெள்ளியன்று மாலை  நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்தரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள இன்போசிஸ் தனியார் மென்பொருள் நிறுவத்தில் முதலில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அந்நிறுவன ஊழியர்களனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com