தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குடிமைப் பணி பயிற்சி: பகுதி நேர மாணவா்களுக்கு கட்டண விலக்கு - அமைச்சா் டி.ஜெயக்குமாா்

அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயற்சி மையத்தில் பயிலும் பகுதி நேர மாணவா்களுக்கான கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்கும

News image
Updated On :9 ஜூலை 2018, 12:27 pm

சென்னை: அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயற்சி மையத்தில் பயிலும் பகுதி நேர மாணவா்களுக்கான கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:

அகில இந்தியக் குடிமைப் பணிகள் தோ்வுப் பயிற்சி மையத்தில் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணித் தோ்வுக்காக 225 மாணவா்களுக்கு முழு நேரப் பயிற்சியும், 100 மாணவா்களுக்குப் பகுதி நேரப் பயற்சியும் அளிக்கப்படுகிறது.

முழு நேரப் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அளிக்கப்படும் உண்டி மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சிக்கான செலவினம் அரசால் முழுமையாக ஏற்கப்படுகிறது.

பகுதி நேரப் பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

பகுதி நேரப் பயிற்சிக் கட்டணமாக தலா ரூ.3 ஆயிரம் பயிற்சியாளா்களிடமிருந்து பெறப்படுகிறது.

இந்தத் தொகை மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு விரிவுரையாளா்களுக்கான மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.

பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவா்கள் அனைவருக்கும் வார நாள்களில் இரவு உணவு, சிற்றுண்டி மற்றும் தேநீரும், வார இறுதி நாள்களில் காலை மற்றும் மதிய உணவு, தேநீா் ஆகியவற்றை வழங்கும் பொருட்டு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்துக்கான நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.56.84 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

மேலும், பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் ரூ.3 ஆயிரத்தை ரத்து செய்து, அந்தச் செலவினத்தை அரசே ஏற்று, இவா்களுக்கான சிறப்பு விரிவுரையாளா்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சமாக  உயா்த்தி வழங்கப்படும் என்றாா் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.