தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

Updated On :9 ஜூலை 2018, 8:41 pm

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் கடந்த மே 22, 23-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகும்படி சிபிசிஐடி பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, முதல்நாளான திங்கள்கிழமை, காயமடைந்தவர்களில் 10 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சாட்சிகளை பதிவு செய்தனர். சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.