ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி 

ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி 

புது தில்லி: ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக முதலில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும், அதன் பிறகே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். இதன்மூலம் மருத்துவ படிப்புகளுக்கு இடம் கிடைக்காதவர்கள் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது

ஆனால் இந்தமுறை முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், தமிழில் 'நீட்'  தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக,மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவின் காரணமாக, தற்பொழுது மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு தாமதாமான நிலையில், இதன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதும் தாமதமாகும் நிலை உள்ளது. எனவே வழக்கமாக ஜூலை மாதம் 30-ஆம் தேதி நிறைவு பெறும் பொறியியல் கலந்தாய்வினை நீட்டிக்க அனுமதி கோரி, பொறியியல் கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோரிக்கையின் பின் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்வதாக கூறிய நீதிபதிகள், ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com