இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் திங்கள்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீன்பிடி தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்க சென்றபோது மூன்று விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முடியாதபடி இலங்கை கடற்படையினர் கப்பலை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் அச்சத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளதால்,விசைப்படகுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை மட்டும் இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


