முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி பொறுப்பேற்பு

இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

News image

இந்திய கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய தளபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற பரமேஷ் சிவமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அப்பொறுப்பில் இருந்து விடைபெறும் தளபதி ராஜன் பர்ஹோத்ரா (வலது).

Updated On :24 ஜூலை 2018, 4:53 am IST

இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
இது குறித்து கடலோரக் காவல்படை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தமிழகம், ஆந்திர மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை இப்பிரிவு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பிராந்தியத்தின் தளபதியாக இருந்து வந்த ராஜன் பர்ஹோத்ரா கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு பிராந்தியத்தின் தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிழக்கு பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி நியமிக்கப்பட்டுள்ளார். பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவருக்கு தற்போதைய தளபதி ராஜன் பர்ஹோத்ரா வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற பரமேஷ் சிவமணி கடலோரக் காவல்படையில் சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பல்களான அவ்வையார்', விஸ்வாஸ்ட்', சமர்' ஆகிய கப்பல்களில் கேப்டனாக பணியாற்றியுள்ள பரமேஷ் சிவமணி, கடல்சார் வழி மற்றும் திசைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்பு புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமை அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி மதிப்பு மிகுந்த தட்ராஷக் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.