கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பாம்பன் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடக்கம்

பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்கியுள்ளது. படகு ஒன்றுக்கு ஆயிரம் கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரை இந்த மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

News image

பாம்பன் பகுதியில் மீனவர்கள் திங்கள்கிழமை தங்களது படகுகளில் கொண்டு வந்து இறக்கிய கிளாத்தி மீன்கள்.

Updated On :24 ஜூலை 2018, 12:56 am IST

பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்கியுள்ளது. படகு ஒன்றுக்கு ஆயிரம் கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரை இந்த மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்குவது வழக்கம். 
இந்நிலையில், ஞாயிற்றுகிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். திங்கள்கிழமை கரை திரும்பிய மீனவர்களின் விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் படகு ஒன்றுக்கு 1000 கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரையில் சிக்கின. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்னர். 
மேலும் கிளாத்தி மீன்பிடி சீசன் ஒரு மாதம் நீடிக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 61 நாள்கள் தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு தற்போதுதான் மீன்படி சீசன் களைக் கட்டத் தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.