மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி 120.50 அடிக்கு உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகள் நிரம்பிய பின்னரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை திங்கள்கிழமை காலை எட்டியது. இதன்மூலம் மேட்டூர் அணை 39-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியையும் தாண்டி 120.05 அடியாக உயர்ந்தது. அதனால், அணையில் இருந்து திங்கள்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 65,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 9 மணிக்கு 75,000 கன அடி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து 120.50 அடியாக உயர்ந்ததால் இரவு 10 மணிக்கு 80,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!

புணே இளைஞர் கொலை! கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி

முதல்வர் விஜய் சைகை: அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்

அமோனியா கசிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டவர்! ஆந்திரத்தில் உயிருடன்! ஆதார் மோசடி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



