
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன், சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக இருந்த செ.மணியனின் பதவிக் காலம் கடந்த 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து பரிந்துரை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முருகேசன் நியமிக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய துணைவேந்தரை நியமித்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.
புதிய துணைவேந்தரான முருகேசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.