
கடலூர்: போதுமான அளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ் கடலூர் அருகே உள்ள வடக்குத்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
போதுமான அவளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மொத்த கொள்ளவான 47.50 அடியில் தற்பொழுது இரண்டு முதல் மூன்று அடி வரையே நீர் இருப்பு இருக்கிறது. எனவே சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமானார்கோவில் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து விட்டது.
அதேசமயம் பரவனாறில் இருந்து சென்னைக்கு நீர் விநியோகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.