

சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து, அவர்களது உடல் உறுப்புகள், எலும்புகளை விற்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை ஏன் மூடக் கூடாது என்று ஆர்டிஓ அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, கருணை இல்லத்தை நடத்தி வரும் பாதிரியார் தாமஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் உரிய அனுமதி பெற்றே கருணை இல்லத்தை நடத்தி வருவதாக வாதிடப்பட்டது.
தமிழக அரசின் அனுமதியைப் பெற்று கருணை இல்லத்தை நடத்துவதாகக் கூறப்படும் போது, அதனை ஏன் மூட வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.